நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.
அதன்படி தேங்காய்ப்பாலில் தாய்ப்பாலுக்கு இணையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உணவு மட்டுமல்ல, ஒரு மருந்தும் கூட. தேங்காய் கொழுப்பு நிறைந்தது என்று பலரும் நினைத்து தவிர்க்கிறார்கள். ஆனால் அதில் உள்ளது நல்ல கொழுப்பு. தேங்காயை தினமும் பச்சையாக சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அபரிமிதமாகக் கிடைக்கும். நரம்புகள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும். ரத்த நாளங்கள் அடைபடாமல் பாதுகாக்கும். நுரையீரலில் கப்பம் கட்டாமல் சுத்தப்படுத்தும். வாழ்வின் கடைசி தருவாயில் இருப்பவர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து வந்தால் வாழ்நாளை நீட்டிக்க முடியும். தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் போன்ற சில வேதிப்பொருள்கள் வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற நுண் கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்டவை. எனவே இவ்வளவு அதிக மருத்துவ குணங்கள் கொண்ட தேங்காய்ப்பாலை சாப்பிடுவது மிகவும் நல்லது.