உடலுறவுக்கு பிறகு கர்ப்பத்தை தடுக்க உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளை இளம் பெண்கள் பயன்படுத்தக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தம்பதியினருக்கு இடையில் உடல் உறவு என்பது மிகவும் அவசியம். ஆனால் அவ்வாறு உடலுறவு கொள்ளும் போது கர்ப்பம் தரித்து விடுமோ என்ற அச்சம் அனைவருக்கும் உண்டு. இந்நிலையில் உடலுறவுக்கு பிறகு கர்ப்பத்தை தடுக்க 72 மணி நேரத்திற்குள் உட்கொள்ளும் வகையில் ஐபில் போன்ற உடனடி கருத்தடை மாத்திரைகளை இளம் பெண்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அந்த மாத்திரையை 24 மணி நேரத்திற்குள் எடுத்தால் 90 சதவீதம் பாதுகாப்பளிக்கிறது.
ஆனால் பாதுகாப்பற்ற உடலுறவால் ஏற்படும் பால்வினை நோய்களை இது தடுக்காது. இது மாதவிடாய் சுழற்சியை பாதிப்பு, அதிக ரத்தப் போக்கு, மார்பகங்களில் வலி உள்ளிட்ட பக்க விளைவுகளும் ஏற்படலாம். அதனால் பெண்கள் இந்த மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது. அதனைத் தொடர்ந்து உட்கொள்வதால் உடலுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.