Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிரடி உத்தரவால் மூடப்பட்டவை… வெறிச்சோடி காணப்பட்ட தலங்கள்… பல தரப்பினரும் கோரிக்கை..!!

தமிழக அரசு அறிவித்துள்ள தடையால் கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தலங்கள் அனைத்தையும் மூட அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சுற்றுலா சுற்றுலா தலங்கள் கடந்த 19-ஆம் தேதி மாலையில் மூடப்பட்டன. மேலும் செட்டியார்பார்க், பிரையண்ட் பார்க், படகு குழாம் ஆகியவற்றை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தந்தனர். அரசியல் கட்சியினரும் தேர்தல் பணி முடிந்தவுடன் ஓய்வுக்காக வருகை தந்துள்ளனர். அவர்களில் பலரும் நேற்று முன்தினமே சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர்.

இதன் காரணமாக சுற்றுலாவிற்காக வந்த வாகனங்கள் கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் நீண்ட வரிசையில் ஊர்ந்து சென்றது. இதனால் சுற்றுலாத் தலங்கள் ஆள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கொடைக்கானலில் விடுதி உரிமையாளர்கள், சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள், தொழிலாளர்கள், வழிகாட்டிகள், டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகிய பல தரப்பினரும் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டதால் வருத்தம் அடைந்துள்ளனர். அவர்கள் கொரோனா விதிமுறையால் தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |