வேலூர் மாவட்டத்தில் மோகன் என்பவர் சொந்தமாக பட்டாசு கடை நடத்தி வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று மோகன் கடைக்கு பட்டாசு வாங்க வந்தவர்கள் பட்டாசு வெடித்து டெமோ காட்டுமாறு கூறியுள்ளனர். அப்போது மோகனுடைய பேரன்கள் தனுஷ், தேஜஸ் ஆகிய இருவரும் கடைக்குள் இருந்துள்ளனர். இதையடுத்து மோகன் வெளியே வந்து பட்டாசு வெடித்து டெமோ காட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தீப்பொறியானது கடைக்குள் விழுந்து பட்டாசு கடை தீப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மோகன் தன்னுடைய பேரன்களை காப்பாற்றுவதற்காக கடைக்கு ஓடி வந்துள்ளார். ஆனால் மூன்று பேரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். ஆனால் கடை முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்நிலையில் தனது இரண்டு குழந்தைகளையும், அப்பாவையும் இழந்த தாய் திவ்யா பெரும் சோகத்தில் இருந்துள்ளார். எனவே திவ்யா கணவர், உறவினர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். ஆனாலும் மிகுந்த மனக் கவலையில் இருந்த திவ்யா ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.