பிரித்தானியாவில் 20 வயதுடைய இளம் பெண் மர்ம நபர்கள் சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் நள்ளிரவில் 20 வயது இளம்பெண்ணுக்கு மர்ம நபர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் மான்செஸ்டரின் Wythenshawe-வில் உள்ள Kirkup Gardens பகுதியில் நடந்துள்ளது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவர் கூட கைதாகவில்லை. எனவே யாரேனும் இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை ஆய்வாளர் காரா சார்லஸ்வொர்த் கூறும்போது, ஒரு பயங்கரமான சம்பவம் நேற்று நள்ளிரவு நேரத்தில் நடந்துள்ளது எனவும், இந்த மோசமான செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
இந்நிலையில் அந்த சம்பவம் அரங்கேறிய அந்த கார்டன் பகுதியில் அதிக அளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த பயங்கரமான சம்பவம் நள்ளிரவில் நடைபெற்றதால் அதனை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை எனவும், அதையும் மீறி யாரேனும் அதனை பார்த்திருந்தால் உடனடியாக காவல் துறையினரை தொடர்பு வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து அந்த 20 வயது இளம்பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்த மர்ம நபர்கள் விபரம் குறித்து தங்களுக்கு தெரிய வந்தால் இது காவல்துறையினருக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கூறுகையில், இது மிகவும் மோசமான சம்பவம். ஆனால் அந்த பூங்காவில் இதுவரை எந்த பிரச்சினையும் இல்லாமல் ஒரு நல்ல சூழ்நிலையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார். மேலும் அந்த பெண் ஒரு நல்ல பெண் என்பதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அவள் நல்ல நிலையில் இருப்பாள் என்று நான் நம்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.