Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அங்க போனதுக்கு அப்புறம் வந்துடுச்சு… பாதிக்கப்பட்ட ஆசிரியை மற்றும் மாணவிகள்… தென்காசியில் பரபரப்பு…!!

அரசுப் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவிகள் என மொத்தம்  10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் தமிழக அரசு ஊராடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் இருந்தும் முழு ஊரடங்குகளில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள மாறாந்தை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் நான்கு பிரிவுகளில் சுமார் 70க்கும் மேற்பட்ட 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் படித்து கொண்டு இருகின்றனர். இதனையடுத்து இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் கடந்த 5, 6 தேதிகளில் தேர்தல் பணிக்கு சிவகிரிக்கு சென்று வந்துள்ளார். அதன்பிறகு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் அந்த ஆசிரியை மருத்துவமனைக்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த ஆசிரியருடன் பணியாற்றிய சக ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் என மொத்தம் 77 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்தப் பரிசோதனையில் 7 மாணவிகளுக்கும், இரண்டு ஆசிரியைகளுக்கும்,கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த ஆசிரியருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |