பிரிட்டனில் உணவகம் மற்றும் பார்கள் திறக்கப்பட்டதை அடுத்து ஒரே நாளில் 2.8 மில்லியன் லிட்டர் பீர் விற்பனையாகியுள்ளது.
பிரித்தானியாவில் நீண்டகால கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கடந்த வாரம் அந்நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அதில் கிட்டத்தட்ட 50,000 உணவகங்கள், பப், பார்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து பப் , பார் மற்றும் உணவகங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை அன்று ‘Super Saturday Night’ என்று சொல்லும் அளவிற்கு உணவகம் மற்றும் பார்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதனையடுத்து கொரோனா காலத்தில் அனைத்து உணவக உரிமையாளர்கள் இழப்பை சந்தித்த நிலையில் கடந்த ஒரே வாரத்தில் மொத்த நஷ்டத்தையும் சரி கட்டியுள்ளனர். அந்த ஒரே நாளில் மட்டும் 2.8 மில்லியன் லிட்டர் பீர் விற்பனையாகிறது. அதாவது பிரித்தானிய மக்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளில் 2 பைண்ட் பீரை குடிக்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பிரிட்டனில் கொரோனா தொற்றால் ஏற்படும் இழப்புகள் குறைந்துள்ளதால் இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.