மிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து,9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் குறைந்தபட்சமாக தேர்ச்சி மதிப்பெண் 35 வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவதாக அரசு வெளியிட்ட உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை.
மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும் என்று வெளியான தகவலில் உண்மை இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுபோன்ற தவறான தகவல்களை கூறி மக்களை குழப்ப வேண்டாம் எனவும் அறிவித்துள்ளது. கண்டிப்பாக10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடத்தப்படாது என தெரிவித்துள்ளது .