பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் இணைந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியல் டிஆர்பி யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் அகிலன் பிரபுதேவாவின் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பஹீரா .
இந்த படத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அகிலன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அகிலன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.