தலைநகர் டெல்லியில் கொரோனா அதிகரித்து வருவதால் புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் பணம் போடுவது மத்திய அரசின் கடமை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
டெல்லியில் கொரோனாவின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதன் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர நேற்று முன்தினம் இரவு 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளனர். பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல அங்குள்ள ஆனந்த் விகார் பேருந்து நிலையத்தில் அதிகளவில் குவிந்துள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தகவல் ஒன்றினை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில்’புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் இடம்பெயர தொடங்குகின்றனர். இதுபோன்ற வறுமைச் சூழலில் அவர்களின் வங்கி கணக்கில் பணம் போடுவது மத்திய அரசின் கடமையாகும். ஆனால் கொரோனா பரவலுக்கு பிறரை குற்றம் சாட்டி கொண்டிருக்கும் அரசு, இதுபோன்று பொது உதவி நடவடிக்கையை எடுக்குமா?’ என்று கேட்டுள்ளார்.
இது தொடர்பாக மற்றொரு டுவிட்டர் பதிவில், 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி இல்லை என்றும் இடைத்தரகர்களை எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் தடுப்பூசிகளை வாங்குகின்றனர். சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்கு தடுப்பூசி போடுவதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. இது மத்திய அரசின் தடுப்பூசி வினியோக திட்டம் இல்லை தடுப்பூசி திட்டம்’ என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ‘கொரோனா சூழல் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிப்பு போன்ற கடுமையான முடிவுகளை அரசு எடுக்க நேரிடும் என்பது தெரிந்த ஒன்றாகும். இதனால் மீண்டும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள்பாட்டை தாங்களே பார்த்துக் கொள்ளும்படி விடப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இதுவா உங்கள் திட்டம்? கொள்கைகள் என்பது எல்லோரது நலத்திலும் கவனம் கொள்வதாக இருக்க வேண்டும். ஏழைகள், தொழிலாளர்கள், தெரு வியாபாரிகளுக்கு நிதி உதவி என்பது தற்போதைய அவசிய தேவையாகும். இதனால் தயவு செய்து இதற்கு நடவடிக்கை எடுத்து உதவி செய்யுங்கள்’ என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.