பல்வேறு பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாகி இருப்பவர் சாமியார் நித்யானந்தா. இவர் கைலாசம் என்ற நாட்டை உருவாக்கி அதில் தான் வசிப்பதாக பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து அவ்வப்போது வீடியோ மூலம் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். மேலும் கைலாசா நாட்டிற்கு என்று தனியாக கரன்சிகள், தங்க நாணயங்கள் மற்றும் தனி ரிசர்வ் பேங்க் உள்ளதாக அதிரடி அறிவிப்பையும் நித்யானந்தா வெளியிட்டார்.
எனவே கைலாசா தொடர்பாக பலரும் பல விதமான வதந்திகளை பரப்ப தொடங்கினர். இவர் ஏற்கனவே தன்னைத்தானே தான் கடவுள் என்றும் தான் சிவனின் அவதாரம் என்றும் கூறிக் கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்யானந்தா பெயரில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதில் “இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக இந்தியாவில் இருந்து கைலாசாவிற்கு பக்தர்கள் வர அனுமதி மறுக்கப்படுகிறது எனவும், ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து பக்தர்கள் கைலாச நாட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.