நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் ,டெல்லி கேப்பிடல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேற்று சென்னையில் நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரின் ,13 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. டாஸ் வென்று மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து ,9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை குவித்தது. குறிப்பாக டெல்லி கேப்பிடல் அணியின் வீரரான அமித் மிஸ்ரா ,சிறப்பாக பவுலிங் செய்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் வீசிய ஓவர்களில் மும்பை அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, இஷன் கிஷன், பொல்லார்டு ஆகியோரின் விக்கெட்டுகளை அமித் மிஸ்ரா கைப்பற்றினார். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி ,137 ரன்கள் மட்டும் எடுத்தது.
மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து சென்னை மைதானத்தில், 4 வது போட்டியை விளையாடுகிறது . ஆனால் டெல்லி அணி நேற்றுதான் , தனது முதல் போட்டியை சென்னையில் தொடங்கியுள்ளது. முதல் போட்டியிலேயே டெல்லி அணி வீரர்கள் ,சென்னை பிட்ச்சிற்கு ஏற்றவாறு, தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் குறிப்பாக அமித் மிஸ்ரா நேற்றைய ஆட்டத்தில் முக்கிய 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவருடைய 4 ஓவர்களில் 24 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து ,4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘நான் பவுலிங் செய்யும் போது எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்’ என்ற நோக்கத்துடன் செயல்படுவேன். டி20 போட்டிகளில் நான் பவுலிங் செய்யும்போது, விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியினரை திணற வைப்பேன் என்று கூறியுள்ளார்.