Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இரட்டை குழந்தைகளோடு தீக்குளித்த தாய்… ஏக்கத்தில் இருந்த குழந்தையின்நிலைமை…காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்து தாய்  தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூவந்தி கொள்ளை கிராமத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள பாண்டி பஜாரில் செல்போன் பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு தர்ஷன், தர்ஷன் என்று இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர்.

இவர்களுக்கு இடையை ஏதோ குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் ஜெயபால் செல்போன் கடைக்கு கிளம்புவதற்காக வீட்டின் வெளியே இருக்கும் குளியலறைக்குச் சென்று இருக்கிறார். இதனையடுத்து தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்த மகேஸ்வரி திடீரென கதவை உட்புறமாக தாழிட்டு மண்ணெண்ணையை தன் மீதும் குழந்தைகள் மீதும் ஊற்றி கொண்டு தனது 2 குழந்தைகளையும் கட்டிப்பிடித்துக் கொண்ட நிலையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை தர்சினிக்கு சிகிச்சை பலன் அளிக்காததால் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.மேலும் தர்ஷனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றார். இவ்வாறு தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த குழந்தையின் மனதில் ஏக்கத்தை ஏற்படுத்தி அந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |