சுவையான இறால் பக்கோடாவுடன் மாலை டீ குடிப்போம் .இறால் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இறால் மீன் ( பெரியது ) : 1/2 கிலோ
கடலை மாவு : ஒரு கப்
பேக்கிங் பவுடர் : ஒரு டீஸ்பூன்
எண்ணெய் : பொறிக்க தேவையான அளவு
உப்பு : ருசிக்கேற்ப
செய்முறை:
முதலில் இறாலை நன்றாக சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும் கடலை மாவு, பேக்கிங்
பவுடர், உப்பு மற்றும் மிளகாய்த் தூள் எல்லாவற்றையும் தண்ணிர் விட்டு கரைத்து கொள்ள வேண்டும்.
5 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும் விட்டுவிடுங்கள்.
வாணலியில் எண்ணையை உற்றி சூடாக்கி இறாலை மாவில் முக்கி எடுத்து போட்டு பொறிக்க வேண்டும்.
இறால், பக்கோடா மெத்தென்று பெரிய அளவில் சாப்பிட சுவையாக இருக்கும்.
இறாலையும் மற்ற மசாலா பொருட்களையும் அதிக தண்ணிர் சேர்க்காமல் பிசைந்தது அப்படியே சூடான எண்ணெயில் போட்டுபொறித்து எடுக்கலாம்.