Categories
மாநில செய்திகள்

வரதட்சனை கொடுமை…. உயிரிழந்த பெண்…. கணவர் மற்றும் பெற்றோர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை….!!!

கடலூரில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காலகட்டத்தில் வரதட்சனை கொடுமை பல சட்டங்களுக்கு பிறகு சற்று குறைந்து வந்த நிலையில் கடலூரில் திருமணம் நடந்த சில காலத்திற்குப் பிறகு கணவன் மனைவியிடம் வரதட்சனை கேட்டு கொடுமை செய்ததினால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் வழக்கு  பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கணவன் மற்றும் கணவனின் பெற்றோர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதற்காக மேல் முறையீடு கேட்டு தீர்ப்பை ஒத்தி வைக்குமாறும் ஜாமின்  வழங்குமாறும் மனு கொடுத்திருந்தனர். அந்த மனுவில் எங்கள் மகனுக்கு திருமணம் ஆன நாளிலிருந்து நாங்கள் தனியாகத்தான் வசித்து வருவதாகவும் ஆகையால் இந்த தற்கொலை சம்பவம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகனிடம் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மகனுடன் சேர்ந்து பெற்றோர்கள் மருமகளை கொடுமை செய்ததற்காக ஆதாரம் அவர்களிடம் இருப்பதாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து நீதிபதி பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமை மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் மகனுடன் சேர்ந்து பெண்ணிடம் பணம் நகை போன்ற பொருட்களை கேட்டு துன்புறுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

அதன் பிறகு அவனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று சில பெற்றோர்கள் தப்பிக்கவும் நினைக்கின்றனர். மேலும் நீதிபதி ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது வளர்ப்பது மற்றும் நல்ல படிப்பை தருவது, நல்ல வேலையைப் பெற  குழந்தையை ஊக்குவிப்பது மட்டுமல்ல, நல்ல பொறுப்புள்ள குடிமகனாக வளர்க்க வேண்டியதும் பெற்றோரின் கடமைதான் எனக் கூறியனார் .

மேலும் தண்டனையை நிறுத்திவைக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இது வரதட்சனை கொடுமை என்ற பெயரில் தவறு செய்ய நினைக்கும் அனைத்து கணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் ஒரு பாடமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |