Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மீனாட்சி அம்மைக்கு சித்திரை திருவிழா…. உள்திருவிழாவாக நடத்த உத்தரவு…. கோரிக்கை விடுத்த பக்தர்கள்….!!

சித்திரை திருவிழாவை உள்திருவிழாவாக நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

பாண்டிய மன்னருக்கு மகளாகப் பிறந்து பட்டத்து அரசியாக மகுடம் சூட்டி நாட்டை ஆண்டு தேவாதி தேவர்களை போரில் வென்று சிவபெருமானை திருமணம் செய்து கொள்வார் மீனாட்சி அம்மை. மதுரையை ஆண்ட மகாராணிக்கு சித்திரை மாதம் உலகப் புகழ்பெற்ற திருவிழா ஒன்று நடைபெறும். இந்த திருவிழா கடந்த ஆண்டு கொரோனாவால் தடைசெய்யப்பட்டு திருக்கல்யாணம் மட்டும் நடந்துள்ளது.

இந்த ஆண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக சித்திரை திருவிழாவிற்கு அரசு தடை விதித்துள்ளது. இருபினும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இதனை உள்திருவிழாவாக நடத்த அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. இந்த கொடியேற்றத்தில் கோவில் பட்டர்கள் மற்றும் இணை கமிஷனர் இவர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

இந்த சித்திரை திருவிழாவில் சுவாமியும் அம்மனும் மாசி வீதியில் உலா வருவது வழக்கமான ஒன்று. ஆனால் திருவிழாவை உள் திருவிழாவாக நடத்த உத்தரவிட்டதால் சுவாமியும் அம்மனும் ஆடி வீதியில் பக்தர்கள் யாரும் இன்றி வலம் வருவர். இதனை அடுத்து வருகின்ற 22 ஆம் தேதி 8:30 மணிக்கு ஆறுகால் பீடத்தில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சூட்டி நவரத்தின செங்கோல் வழங்கப்படும்.

அதன்பின் மறுநாள் எட்டுத்திக்கிலும் உள்ள தேவர்களை வென்று கடைசி இறைவனிடம் போர்புரியும் நிகழ்ச்சியும் நடைபெறும். அதன்பின் வருகிற 24-ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த விழாவை காண பக்தர்கள் முக்கிய பிரமுகர்கள் என யாருக்கும் அனுமதி இல்லை.

மேலும் திருக்கல்யாணம் முடிந்த பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு மூலவர் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரரை வழிபாடு செய்ய முடியும். அதனால் திருக்கல்யாண கோலத்தை காண முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருக்கல்யாண கோலத்தை காண வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விழாவின் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Categories

Tech |