Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

5 வருஷமா இத கொடுத்துட்டு தான் வேலை செஞ்சீங்களா…? முதன்மை கல்வித்துறை அதிகாரி அதிரடி நடவடிக்கை…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

ராணிப்பேட்டையில் போலி சான்றிதழ்களை கொடுத்து பணியாற்றி வந்த ஆசிரியரை முதன்மை கல்வித்துறையின் அலுவலர் பணி இடைநீக்கம் செய்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமதி என்பவர் வசித்து வருகிறார். இதற்கிடையே நெமிலியில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இதில் சுமதி கடந்த 5 வருடங்களாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருடைய 12 ஆம் வகுப்பிற்கான மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை அறிவதற்காக அரசாங்க தேர்வுத்துறையினர்களுக்கு அனுப்பி வைத்தது. அதில் அந்த சான்றிதழ் போலியானது என்பதும், அதனை அரசாங்கம் வழங்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுமதியை மாவட்டத்தின் முதன்மை கல்வித்துறையின் அலுவலரான மதன்குமார் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் முதன்மை கல்வித்துறையின் அலுவலர் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |