Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் பல்சுவை

உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் சுவையான நண்டு குழம்பு!!…

பல நன்மைகளை  வழங்கும் சுவையான நண்டு குழம்பு  செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

நண்டு                                :             1 கிலோ

சோம்பு                              :            2 ஸ்பூன்

பூண்டு                                :            5 பல்

புளி                                      :           ஒரு எலுமிச்சம் பழம் அளவு

வெங்காயம்                    :           3

நாட்டு தக்காளி              :           4

மிளகு                                 :           1 ஸ்பூன்

சீரகம்                                  :           2 டீ ஸ்பூன்

மிளகாய்த்தூள்               :          2  டீ ஸ்பூன்

மல்லித்தூள்                    :          3டீ ஸ்பூன்

மஞ்சள்தூள்                     :          1/4 டீ ஸ்பூன்

உப்பு                                     :           தேவையான அளவு

எண்ணெய்                        :           தேவையான அளவு

செய்முறை:

முதலில் நண்டு நன்றாக சுத்தம்  செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்

வெங்காயத்தையும், தக்களியையும் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பிறகு சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கி பிறகு அரைத்த மிளகு, சீரகம்,                      சோம்பு பூண்டு சேர்த்து வதக்கி,மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,மல்லித்தூள் போட்டு நன்றாக               வதக்க வேண்டும்.

பிறகு புளியை கரைத்து ஊற்றி,தண்ணீர் உப்பு சேர்த்து நன்றாக கொதித்த பிறகு நண்டை                       போட்டு மூடிவிட வேண்டும்.

நண்டு நன்றாக  வெந்த பிறகு கொத்தமல்லி,கருவேப்பில்லை போட்டு இறக்கி மூடி                               வைக்கவேண்டும்.

Categories

Tech |