Categories
தேனி மாவட்ட செய்திகள்

செவிலியர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்….!!

தேனியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கொடி ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சுகப்பிரியா. இதற்கிடையே இவர் மதுரை மாவட்டத்திலிருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் திடீரென்று சுகப்பிரியா வீட்டினுள் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |