தேனியில் கூலித்தொழிலாளி விஷத்தினை குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடியில் கூலித் தொழிலாளியான அருணாசலம் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அருணாச்சலம் கடந்த 2 ஆண்டுகளாக வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து மன அழுத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு விஷத்தினை குடித்து அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.