சேலம் மாவட்டத்திலுள்ள விமான நிலையத்தில் 10 கோடி அளவிலான 2 அதிநவீன தீயணைப்பு வாகனம் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள காமலாபுரம் பகுதியில் சேலம் விமான நிலையம் இயங்கி வருகின்றது. இந்த விமான நிலையத்தில் சென்னையிலிருந்து சேலத்திற்கு, சேலத்திலிருந்து சென்னைக்கு நாள்தோறும் தனியார் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் விமான நிலையத்திற்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 கோடி மதிப்பிலான அதிநவீன 2 தீயணைப்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீயணைப்பு வாகனம் பற்றி விமான நிலைய இயக்குனர் ரவீந்திரசர்மா கூறியுள்ளதாவது, விமான நிலையத்தில் தற்போது சிறிய ரக விமானம் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் வருங்காலத்தில் பெரிய ரக விமானம் இயக்கப்பட்டாலும் பாதிப்பு ஏற்பட்டால் பாதுகாக்கும் வகையில் அதிநவீன 2 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீயணைப்பு வாகனம் 40 நிமிடங்களில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் தண்ணீரை செலுத்தும் வகையிலும் நான்கு புறமும் தண்ணீரை சுழன்று அடிக்கும் வல்லமை உடையது. மேலும் இந்த வாகனத்தில் உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.