தோட்டத்திற்குள் இருந்த 10 அடி நீள மலைப் பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள குன்னாரம்பட்டி கிராமத்தில் இருக்கும் தென்னந்தோட்டத்திற்குள் தென்னங்கீற்றுகளை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கும்போது 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று அதில் பதுங்கி இருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை வனப்பகுதிக்குள் சென்று பத்திரமாக விட்டுள்ளனர். இப்பொழுது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் இரைதேடி வன உயிரினங்கள் ஊருக்குள் வருகின்றன. இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.