Categories
மாநில செய்திகள்

நீதிமன்றங்களில் கட்டுப்பாடுகள் அமல்…. வெளியான தகவல்..!!

கொரோனா பரவல் காரணமாக நீதிமன்றங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது. பல இடங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து சென்னை மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.

கீழமை நீதிமன்றங்களில் நேரடி மனு தாக்கல் செய்யும் நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தின் வெளியே வைக்கப்படும் பெட்டிகளில் மனுக்களை போட வேண்டும். நேரடி விசாரணை தேவை எனில் மூன்று நாட்களுக்கு முன் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |