தடுப்பூசி விலையை இரு மடங்கு உயர்த்தியதற்காக மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் கோவிஷில்டு கொரோனா தடுப்பூசி விலையை இரு மடங்கு உயர்த்தியதற்கு மருத்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் கட்டுப்பாடின்றி தனியார் நிறுவனங்களே தடுப்பூசி விலையை நிர்ணயித்து இருப்பது பதுக்களுக்கு வழிவகுக்கும். தேவை அதிகரிக்கும் போது கொரோனா தடுப்பூசி விலை மேலும் உயர்த்தப்படும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.