பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்த இலங்கை சேர்ந்த 5 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.
கேரளாவில் அரபிக்கடல் பகுதியில் இந்திய கடற்படைக் கப்பலான ‘சுவர்ணா’கப்பலில் வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது ஒரு மீன்பிடி படகு அப்பகுதியில் நீண்ட நேரமாக சுற்று இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த கடற்படையினர் அந்தப் படகை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன் பிறகு படகில் ஏறி சோதனை செய்த பொழுது அதிலிருந்த 300 கிலோ எடையுள்ள போதை பொருள்களை பறிமுதல் செய்தனர்.
அவர்கள் கொண்டுவந்த போதைப்பொருட்களின் சர்வதேச சந்தையின் மதிப்பு சுமார் 3 ஆயிரம் கோடி ஆகும். மேலும் போதைப் பொருட்களை ஏற்றிவந்த படகு இலங்கையை சேர்ந்தது என்றும் அந்த போதைப் பொருட்கள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டது என்பதும் தெரியவந்தது ஆகையால் அதில் இருந்த இலங்கையை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் போதைப் பொருட்கள் கடத்தி வந்த படகையும் 5 பேரையும் போலீசார் கொச்சினுக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் தென்பிராந்திய கடற்படையை சேர்ந்த அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தபட்டது.இவர்களில் பிடிப்பதன் மூலம் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலின் திட்டம் முறியடிக்கபட்டதாக தெரிவித்துள்ளனர்.