கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட பிறகும் கொரோனா தாக்குவது ஏன் என்பது குறித்து கோவாக்சின் தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட பிறகும் கொரோனா தாக்குவது ஏன் என்பது குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவாக்சின் தயாரிப்பு நிறுவனம் பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ண எல்லா கூறுகையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் நுரையீரலின் கீழ் பகுதி மட்டும் பாதுகாக்கப்படும் என்றும் அதன் மேல் பகுதி பாதுகாக்கப்படாததால் இரண்டு டோஸ் செலுத்திய பின்பும் தொற்று ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்திய பின்பும் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற பொது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசிகள் தாக்கத்தை குறைக்கும் என்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படாதவாறு காக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.