இரவு உணவுக்கு மீன் வாங்க சென்ற காவல்துறை அதிகாரிக்கு கோடிக்கணக்கில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
தாய்லாந்து வடகிழக்கு புரிராம் மாகாணத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி Lieutenant Colonel இரவு உணவுக்காக மீன் சந்தையில் இருந்து கடல் நத்தைகளை வாங்கிக் கொண்டு வந்துள்ளார். பின்னர் அவர் சமைப்பதற்காக நத்தைகளை சுத்தம் செய்துள்ளார். அப்போது ஒரு ஒரு நத்தையை விளக்கும்போது அதில் ஆரஞ்சு நிறத்தில் உருண்டையாக இருப்பதை கண்டார். பின்னர் அதை தூக்கி வீசிவிட்டு சமைக்க தொடங்கினார்.
ஆனால் அதன் பளபளப்பு அவரை சந்தேகத்திற்கு உள்ளாக்கியது. உடனே அதை எடுத்து கண்ட போது அது 6 கிராம் எடை கொண்ட ஆரஞ்சு மெலோ முத்து என்பதை கண்டறிந்தார். மெலோ முத்துகள் உலகில் மிகவும் அரிதாக கிடைக்கும் முத்து வகைகளில் ஒன்று என்பதால் பல கோடிகள் மதிப்பு மதிப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது