Categories
மாநில செய்திகள்

உலக மகா நிபுணர் படுதோல்வி அடைந்தது ஏன்…? ஸ்டாலின் கேள்வி..!!

நிர்வாகத்தில் உலகமகா நிபுணர் என பெயர் பெற்ற பிரதமர் மோடி கொரோனா தடுப்பில் படுதோல்வி அடைந்தது ஏன் இன்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். இதனால் உயிர் இழப்பு அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

இந்த நிலையில் தமிழகத்தில் 9,300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தது ஏன் என்று ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பூசிகளை வீணடித்ததில் தமிழகம் முதல் இடத்தை பிடிக்கின்றது. இந்த அவப்பெயரை அதிமுகதான் ஏற்படுத்தியுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Categories

Tech |