Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் கசிவு…. 22 பேர் மரணம்…. பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். ஆக்சிஜன் கொண்டுவரப்பட்ட டேங்கர் லாரியில் இருந்து வாயு கசிந்து மருத்துவமனை வெளிப்புறம் முழுவதும் பரவி பலர் உயிருக்குப் போராடி வருகின்றனர். இதனையடுத்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் கசிவு சம்பவம் மனதை உறுத்தியுள்ளது. நடைபெற்ற விபத்தால் துன்பத்தில் உள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |