நாமக்கல் மாவட்டத்தில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அலுவலர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கி பேசியுள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்தது வருவது கவலைக்குரியதாகும்.
தற்போது தொற்று குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து வயதினரையும் பாதிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் காய்ச்சல், இருமல், சளி இருந்தாலே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மேலும் இருசக்கர வாகனங்களில் இரண்டு பேருக்கு மேல் சென்றால் 500 ரூபாய் அபராதம் விதித்து நடைமுறை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.