தமிழகத்தில் திட்டமிட்டபடி மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்தனர். இதைத்தொடர்ந்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து மே இரண்டாம் தேதி காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் முதலில் எண்ண படும் என்றும் தெரிவித்திருந்தார். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் மே இரண்டாம் தேதி கொரோனா கட்டுப்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கையில் தாக்கம் ஏற்படுமா? என்பது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார்.