Categories
சென்னை மாவட்ட செய்திகள்

100க்கு 60 பேர்…. வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம்…. கடும் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் நேற்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில் சென்னையில் 100 பேருக்கு கொரோனா உறுதியானால் அதில் 60 பேர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டிலிருந்து சிகிச்சை பெறும் நோயாளியின் குடும்பத்தினர் வெளியே வரவேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் தயாராகும் 13வது கொரோனா சிகிச்சை மையத்தில் முதற்கட்டமாக 250 படுக்கை தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |