தூத்துக்குடியில் ரூபாய் 1500 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒரு பெரிய கண்டெய்னரில் கருப்பு நிற சிறிய மூட்டைகளாக 28 மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில் கொக்கைன் உள்ளிட்ட 300 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் பதுக்கி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இந்த போதை பொருளின் மதிப்பு ரூபாய் 1500 கோடி இருக்கும் என்று கூறப்படுகின்றது.