Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 64 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவிவருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூர், கோட்டையூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் 64 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் வீட்டு தனிமைகளில் 431 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 64 பேர் பூரண குணமடைந்து நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |