Categories
கிரிக்கெட் விளையாட்டு

PBKS VS SRH : 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்து ….! பஞ்சாப் அணி தடுமாற்றம் …!!!

14 வது லீக் போட்டியில் , பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசஸ் ஹைதராபாத்  அணிகள்   இன்று  மோதல்.

2021 ம் ஆண்டு   ஐ.பி.எல் தொடரின் , 14 வது லீக் போட்டியில் , பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசஸ் ஹைதராபாத்   அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம் .எ சிதம்பரம்  மைதானத்தில்,  நடைபெறுகிறது . இதில்  டாஸ் வென்ற  பஞ்சாப் கிங்ஸ் அணி  பேட்டிங்கை   தேர்வு செய்துள்ளது.

தொடக்க வீரர்களாக கே .எல் .ராகுல் -மயங்க் அகர்வால் களமிறங்கினர் .இதில் கேப்டன் ராகுல் 6 பந்துகளில் ,4 ரன்களை எடுத்து முதலில் அட்டமிழந்தார் .இவரை தொடர்ந்து  மயங்க் அகர்வால் 25 பந்துகளில் ,22ரன்களை எடுத்து வெளியேறினார் . இதன் பிறகு களமிறங்கிய கிறிஸ் கெயில் – பூரண்  ஜோடியில் , பூரண் ரன் எடுக்காமல் அவுட் ஆனார் .

அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா 11 பந்துகளில் 13 ரன்களும் ,கிறிஸ் கெயில் 17 பந்துகளில் 15 ரன்களும் மற்றும் மொய்சஸ் 17 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் பஞ்சாப் கிங்ஸ் 16 ஓவரில் 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களை எடுத்துள்ளது .

Categories

Tech |