நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாமகிரிப்பேட்டை பகுதியில் முதியவர் ஒருவர் சளி, காய்ச்சல் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த போது தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்ததும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக முதியவர் உயிரிழந்து விட்டார். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது.