நாமக்கல் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படித்து விட்டு பொது மக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் பிரகாசம். இவர் திருமலைபட்டி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்குள்ள மக்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரை வழங்கி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சுதா மற்றும் காவல் துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது முறையாக மருத்துவம் படிக்காமல் பிரகாசம் அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காவல் துறையினர் பிரகாசத்தை கைது செய்து அவரிடமிருந்து மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரிடம் விசாரனை செய்த போது அவர் நாமக்கல்லிலுள்ள பிரபல டாக்டரிடம் உதவியாளராக பணியாற்றிய வந்ததாகவும் அந்த அனுபவத்தில் நோயாளிகளுக்கு மருந்து மற்றும் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.