Categories
தேசிய செய்திகள்

இறப்பதற்கு 36 மணி நேரத்திற்கு முன்…. மருத்துவரின் கண்ணீர் போஸ்ட்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், மருத்துவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மும்பை சேவ்ரி காச நோய் மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்த மனிஷாவுக்கு கொரோனா உறுதியானது.

இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டு வரப்போவதில்லை என்று பேஸ்புக்கில் பிரியாவிடை போஸ்ட் போட்ட அடுத்த 36 மணி நேரத்தில் அவர் உயிரிழந்தார். மேலும் இறப்பதற்கு முன் அழுதபடியே கையெடுத்துக் கும்பிட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |