பெட்டிக் கடையில் வைத்து மது விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் பகுதி பேருந்து நிறுத்தத்தில் உள்ள பெட்டி கடை ஒன்றில் ரகசியமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு ஒருபெட்டி கடையில் மது விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினரை கண்டதும் மது விற்பனை செய்து கொண்டிருந்தவர் அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரை மடக்கிபிடித்து கைது செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் நொய்யல் பகுதியில் வசித்துவரும் மகுடேஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.