Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மக்களை பாதுகாப்பது நமது கடமை…. தொற்று இல்லாத மாவட்டத்தை உருவாக்க வேண்டும்… ஆலோசனை கூட்டம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு முறை ஆலோசனை கூட்டம்  நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தடுக்கும் முறையில் அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிவைக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் நோய் தொற்று  தடுப்பு குறித்து ஆலோசனை  கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்தில சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலாளருமான மதுமதி தலைமை வகித்தார். மேலும் கலெக்டர் மெகராஜ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.

அப்போது அலுவலர் மதுமதி கூறியுள்ளதாவது, பொது மக்களை பாதுகாப்பதுஅரசின் தலையாய கடமையாகும், மேலும் தொற்று தடுப்பு பணிகளை அர்ப்பணிப்போடும், முழு உணர்வோடு மேற்கொள்ள வேண்டும் என்றும் நோய் தொற்று அரசு வழிகாட்டு முறைகளை மக்களிடம் மீண்டும் மீண்டும் எடுத்துரைத்து தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |