கொரோனா தடுப்பூசி செலுத்தியபிறகும் கொரோனா தொற்று எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏன் ஏற்படுகிறது? என்று கோவாக்சின் தயாரிப்பு நிறுவனம், பாரத் பயோடெக் தலைவரான கிருஷ்ணா எல்லா கூறியுள்ளார். அதாவது தடுப்பு மருந்தை ஊசியின் வாயிலாக செலுத்தப்படும் சமயத்தில் அது நுரையீரலின் அடிப்பகுதியை மட்டும் தான் பாதுகாக்கும்.
எனவே இரண்டு டோஸ் செலுத்திக்கொண்ட பின்பும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் தற்போது செலுத்தப்படும் தடுப்பூசியினால் நுரையீரலின் மேல் பகுதியை பாதுகாக்க முடியாது என்று கூறியுள்ளார். எனவே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியப்பின்பும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தடுப்பூசி கொரோனா தீவிரத்தை தடுப்பதோடு, உயிர்கள் பலியாவதையும் குறைக்கும் என்று கூறியுள்ளார்.