Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இவங்களுக்குள்ள என்ன பிரச்சனையா இருக்கும்…? சிறுவனை வெட்ட முயன்ற வாலிபர்… தாயாரின் பரபரப்பு புகார்…!!

வீட்டை சேதப்படுத்தியதோடு, சிறுவனுக்கு வாலிபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள மேலப்பட்டி பகுதியில் மணிமாறன்- நாகராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். மேலும் அதே பகுதியில் பாலமுருகன் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த ராகுலை பாலமுருகன் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார்.

இதனையடுத்து  பாலமுருகன் ராகுலின் வீட்டு ஜன்னல் மற்றும் கதவு போன்ற இடங்களில் அரிவாளால் சேதப்படுத்தியதோடு, ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பதற்றமடைந்த ராகுலின் தாய் நாகராணி அருகில் உள்ள காவல் நிலையத்தில் பாலமுருகன் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |