நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஏலத்திற்கு நாமக்கல், ராசிபுரம், புதுச்சத்திரம், எருமப்பட்டி மற்றும் சேந்தமங்கலம் ஆகிய மாவட்டத்திலிருந்தும் மேலும் அண்டை மாவட்டத்திலிருந்தும் விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த ஏலத்தின் போது ஆ.ர்.சி ரக பருத்தி குவிண்டால் 6 ஆயிரத்து 50 முதல் 6 ஆயிரத்து 809 வரையிலும், கொட்டு ரக பருத்தி கொண்டால் 2 ஆயிரத்து 2 முதல் 4 ஆயிரத்து 100 வரையிலும் மற்றும் டி.சி.எச் ரக பருத்தி குவிண்டால் 6 ஆயிரத்து 350 முதல் 8 ஆயிரத்து 569 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 4,500 மூட்டைகள் வீதம் 05 லட்சத்துக்கு ஏலம் போனது. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்து சென்றுள்ளனர்.