Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“மொத்தம் 78 லட்சம்”…. போட்டிப் போட்டு ஏலம் செய்த வியாபாரிகள்… ஜோராக நடைபெற்ற மஞ்சள் ஏலம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு வேளாண்மை சங்கத்தில் மஞ்சள் ஏலம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் கூட்டுறவு வேளாண்மை சங்கம் அமைந்துள்ளது. அந்த வேளாண்மை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. மஞ்சள் ஏலத்திற்கு ஒடுவன்குறிச்சி, புதுப்பட்டி, ஆத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகளும் விற்பனைக்காக மஞ்சளை கொண்டு வந்துள்ளனர். மேலும் சேலம் ஒடுவன்குறிச்சி மற்றும் நாமகிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மஞ்சளைப் போட்டி போட்டு ஏலம் செய்துள்ளனர்.

இந்த ஏலத்தில் விரலி ரகம் 1,105 மூட்டைகளும், பணங்காலி  ரகம் 35 மூட்டைகள் மற்றும் உருண்டை ரகம் 380 மூட்டைகள் என மொத்தம் 1520 மஞ்சள் மூட்டைகள்  78 லட்சத்திற்கு ஏலம் போனது. போன வாரத்தை விட இந்த வாரத்தில் மஞ்சள் விலை உயர்ந்து காணப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் சென்றுள்ளனர்.

Categories

Tech |