தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடை வீதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள லெட்சுமாங்குடி கடைவீதி, பெரிய கடைத்தெரு, மேல கடைத்தெரு மற்றும் ரேடியோ பார்க் ஆகிய கடைகளில் இரவு ஒன்பது மணிக்கே அடைத்ததால் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.
இதனையடுத்து போக்குவரத்து படிப்படியாக குறைந்து விட்டது. இதனால் இரவு 11 மணி தாண்டியும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகள் ஊரடங்கு காரணமாக 10 மணிக்கே கடை வீதி மற்றும் சாலையோரங்களில் வெறிச்சோடி காணப்பட்டது.