இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குகள் முடிவடைந்த நிலையில் மகாராணியார் தனது பிறந்தநாள் செய்தியை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் துக்கம் அனுசரிக்கும் இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்க விரும்பாத மகாராணி தனது பிறந்தநாள் செய்தியை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் மகாராணியின் கணவர் இறந்த பின் முதன்முறையாக நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் செய்தி இதுவாகும். இதனையடுத்து மகாராணி எலிசபெத்தின் 95வது பிறந்த நாளான இன்று நாட்டு மக்கள், நண்பர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நாட்டு மக்கள் தன் மீது காட்டிய பரிவும், ஆதரவும் என் உள்ளத்தை தொட்டதாகவும், இதற்காக நான் மிகவும் நன்றியுடையவளாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இளவரசர் பிலிப் மறைந்ததால் ராஜ குடும்பம் துக்கத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து வந்த இரங்கல் செய்திகள் எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்துள்ளது என்றும், இதற்காக குடும்பத்தார் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். இத்தகைய செய்திகள் மூலமாக இளவரசர் பிலிப்பின் மறைவு எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நினைக்கும்போது நாங்கள் மிகவும் நெகிழ்ச்சி அடைந்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.