Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது ….. ஒரே தெருவை சேர்ந்த 13 பேருக்கு தொற்று…. சீல் வைக்க அதிரடி உத்தரவு..!!

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே தெருவை சேர்ந்த 13 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே தெருவில் வசிக்கும் 13 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதியில் திருத்துறைபூண்டி மாவட்ட அலுவலர் கௌரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அந்த பகுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் மேட்டுப்பாளையம் பகுதியில் தொற்று வராமல் இருக்க நோய் தடுப்பு நடவடிக்கை  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |