பிரிட்டன் இளவரசர் பிலிப் தன் மனைவி மீது கூறிய ஒரே புகார் பற்றி இளவரசரின் வாழ்க்கை வரலாறு எழுதுபவர் வெளியிட்டுள்ளார்.
திருமணமாகி சில நாட்களிலேயே மனைவியின் மீது எண்ணற்ற புகார்களை சொல்லும் இந்த காலகட்டத்தில் தனது 73 வருட திருமண வாழ்க்கையில் இளவரசர் பிலிப் மகாராணியாரைப் பற்றி ஒரே ஒரு புகார் மட்டுமே சொல்லி இருக்கிறார் என இளவரசரின் வாழ்க்கை வரலாறு எழுதும் Gyles Brandreth தெரிவித்துள்ளார். அவர் இளவரசர் பிலிப் தன் மனைவி எப்போதும் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருக்கிறார் என்றும் அப்படி யாரிடம் தான் பேசுவார் என தன்னிடம் கேட்டதாக Gyles Brandreth கூறியுள்ளார்.
அதற்கு தாம் மகாராணியாருக்கு பிடித்த குதிரை பந்தயத்தில் பந்தயக் குதிரைகளை பற்றி மேலாளரிடம் பேசிக்கொண்டிருக்கிறார் என கூறியதாக தெரிவித்துள்ளார். அதை தவிர ஒருமுறைகூட மகாராணி குறித்து இளவரசர் பிலிப் எந்த புகார் கூறவில்லை என Gyles Brandreth தெரிவித்துள்ளார். இதனிடையே காதல் மனைவிக்காக தனக்கு பிடித்த வேலையை விட்டவர் இளவரசர் பிலிப் என்பது குறிப்பிடத்தக்கது.