Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கவினின் ‘லிப்ட்’… வெளியான மரண மாஸ் அப்டேட்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் கவின் .இவர் நட்புனா என்ன தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில்  நடித்துள்ளார். தற்போது நடிகர் கவின் நடிப்பில் இயக்குனர் வினித் வரப்பிரஸாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லிப்ட். இந்த படத்தில் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். எக்கா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் நாளை மாலை 5 மணிக்கு இந்த பாடல் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ‘இன்னா மயிலு’ எனத் தொடங்கும் இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் கவின் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |