Categories
கிரிக்கெட் விளையாட்டு

KKR VS CSK :சிஎஸ்கே ருதுராஜ்,பிளெசிஸ்… அரைசதம் எடுத்து அசத்தல் …!!!

15 வது லீக் போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணிகள்  மோதல் .

2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 15 வது லீக் போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கண்டே  மைதானத்தில், இன்று இரவு  7 .30 மணிக்கு தொடங்கியது  . இதில்  டாஸ் வென்ற  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணி  பீல்டிங்க்கை  தேர்வு செய்துள்ளது.

இதனால் சிஎஸ்கே  அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – ஃபாஃப் டு பிளெசிஸ் களமிறங்கினர் . தொடக்கத்திலிருந்தே இருவரின் பாட்னர்ஷிப் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தியது .இதில் ருதுராஜ் 8.3 ஓவரில் 2 சிக்ஸர்கள் ,5 பவுண்டரி அடித்து 40 ரன்களை எடுத்துள்ளார் .அடுத்து பிளெசிஸ் 1 சிக்ஸர் ,3 பவுண்டரி அடித்து 33 ரன்களை குவித்துள்ளார் .சிஎஸ்கே  அணி  விக்கெட்டுகள் ஏதுமின்றி 8.3ஓவரில் 74 ரன்களை குவித்தது  .

இதன் பிறகு ருதுராஜ்  42 பந்துகளில்  6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடித்து விளாசி, அரைசதம் அடித்தார் .இதை தொடர்ந்து பிளெசிஸ் 39 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடுத்து ,அரைசதம் எடுத்தார் .ஆனால் 12.2 ஓவரில் ருதுராஜ் 64 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் .இதனால் சிஎஸ்கே  அணி 14 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு ,130 ரன்களை குவித்துள்ளது .

Categories

Tech |